70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று (அக்., 8) டில்லியில் நடந்தது. இந்த விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு வெற்றி பெற்ற திரைத்துறைக் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
தமிழ் திரையுலகில் இருந்து தயாரிப்பாளர் லைகா சுபாஸ்கரன் – பொன்னியின் செல்வன் 1, இயக்குனர் மணிரத்னம் – பொன்னியின் செல்வன் 1, ஏஆர் ரஹ்மான் – பின்னணி இசை, நித்யா மேனன் – திருச்சிற்றம்பலம் , சதீஷ் கிருஷ்ணன் – திருச்சிற்றம்பலம் , ரவி வர்மா பொன்னியின் செல்வன்-1, ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி – பொன்னியின் செல்வன்-1, அன்பறிவு – கேஜிஎப் ஆகியோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
தாதா சாகேப் பால்கே விருது, இந்திய சினிமாவின் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. இந்த விருது, பிரபலமான ஹிந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள மிதுன், “ஐ யம் ஏ டிஸ்கோ டான்சர்” பாடலின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.