பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படம் மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சூரி பேசியதாவது: “ஓடிடி தளங்கள் வந்ததனால், தியேட்டர்களில் படம் பார்க்கும் பார்வையாளர்கள் குறைந்துவிட்டதாக கூறுவது தவறான கருத்து.

தற்போது எனது கையிலே ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமான படங்கள் உள்ளதால், இனிமேல் காமெடி கதாபாத்திரங்களில் நான் நடிக்கும் வாய்ப்பு குறைவுதான். ஆனால் ‘வெண்ணிலா கபடிக்குழு’ போல் ஒரு நல்ல கதையை சொன்னால், நிச்சயமாக ஹீரோவாக நடிக்க தயார்” என்று தெரிவித்துள்ளார்.