யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் மோஹித் சூரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சையாரா’. பாலிவுட் நடிகர் அஹான் பாண்டே நடித்துள்ளார், மேலும் அனீத் பட்டா கதாநாயகியாக நடிக்கிறார். வருகின்ற ஜூலை 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது இப்படத்திலிருந்து ‘சையாரா’ என்ற தலைப்புப் பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் பாடல்களை 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ளதாக இயக்குனர் மோஹித் சூரி கூறியுள்ளார் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கவனமாக மெல்லிசைகள் தொகுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டதாக இவர் கூறியுள்ளது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
