கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படம் ‘லவ் வித் ஆக்ஷன்’ எனும் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. மே மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்திற்காக ஏற்கனவே இரண்டு பாடல்களும் டிரைலரும் வெளியாகி, தொடர்ந்து படக்குழுவினர் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது இந்த ரெட்ரோ படத்தினைச் சுற்றி ஸ்டண்ட் மாஸ்டர், எடிட்டர் உள்ளிட்ட சில தொழில்நுட்ப கலைஞர்களும் அதைப் பற்றிய சில தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த தகவலின்படி, இந்த படத்தில் மொத்தம் 20 ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம்.
அதேவேளை, சூர்யாவின் அறிமுக காட்சி மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும், பல மாறுபட்ட கெட்டப்புகளில், மாஸ் நிறைந்த காட்சிகளில் அவர் நடித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த படத்தின் கிளைமாக்ஸ் எதுவும் யாராலும் எளிதில் யூகிக்க முடியாத விதமாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.