Touring Talkies
100% Cinema

Friday, July 4, 2025

Touring Talkies

பிரசித்தி பெற்ற பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த சினேகா மற்றும் பிரசன்னா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கோவையை அடுத்துள்ள பேரூர் பகுதியில் அமைந்துள்ள பட்டீசுவரர் கோவிலுக்குச் நேற்று இரவு நடிகர் பிரசன்னா தனது மனைவி நடிகை சினேகா மற்றும் சினேகாவின் தந்தை மற்றும் அவருடைய சில உறவினர்களும் வருகை தந்தனர்.

அவர்கள் முதலில் பட்டீசுவரரனை தரிசிந்துவிட்டு, அங்கு அர்ச்சனை செய்து வழிபாடு நிகழ்த்தினர். அதன் பின்னர் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள பால தண்டபாணி சன்னதி, பச்சைநாயகி அம்மன், மற்றும் கனகசபை மண்டபத்திலுள்ள நடராஜர் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, கோவிலில் இருந்த பக்தர்கள் இருவரையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, அவர்களுடன் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் சிறிது நேரம் கோவில் வளாகத்தில் அமர்ந்து பக்தியில் கலந்து கொண்டு, அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

- Advertisement -

Read more

Local News