தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. தற்போது தனது 25-வது படமான ‘சக்தித் திருமகன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அருண் பிரபு எழுதி இயக்கியுள்ளார். அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன் அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு தெலுங்கில் ‘பத்ரகாளி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் த்ரிப்தி கதாநாயகியாக நடித்துள்ளார். அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் நாளை(செப்டம்பர் 19) வெளியாக உள்ளது. ‘சக்தித் திருமகன்’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக விஜய் ஆண்டனி நடித்த த்ரில்லர் திரைப்படமான ‘மார்கன்’ நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.