‘சிவா மனசுல சக்தி’ (எஸ்.எம்.எஸ்) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜேஷ்.எம். அந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்தார். இசையமைப்பை யுவன் சங்கர் ராஜா கவனித்தார். படம் வெற்றிகரமாக ஓடியது.

இப்போது அந்த வெற்றிகரமான கூட்டணி பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது. மலேசியாவைச் சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இந்த புதிய படத்தை தயாரிக்க உள்ளது. இது ‘சிவா மனசுல சக்தி பார்ட் 2’ ஆக இருக்குமா, அல்லது வேறு கதையா என்பதை விரைவில் தெரிந்து கொள்ளலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பே ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகலாம் என்று ராஜேஷ்.எம் கூறியிருந்தார். அந்த முயற்சிக்காக ஆர்யாவும் ஈடுபட்டிருந்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த முயற்சி ஆரம்பிக்கப்படவில்லை. தற்போது ராஜேஷ்.எம், ஜீவா, யுவன் ஆகியோரின் கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளதால், ‘எஸ்.எம்.எஸ் பார்ட் 2’ தொடங்க வாய்ப்பு அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.