Touring Talkies
100% Cinema

Friday, October 3, 2025

Touring Talkies

புதிய விலையுயர்ந்த வீட்டை வாங்கிய சின்னத்திரை மணிமேகலை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரை பிரபலமான மணிமேகலை தமிழகத்தில் பலருக்கும் பேவரைட்டான நபராக இருந்து வருகிறார். இவரது வளர்ச்சி காண்போரை வியக்க வைக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கிறது. கொரோனா காலக்கட்டத்தில் சொந்த கிராமத்தில் நிலம் வாங்கி பண்ணை வீடு ஒன்றை கட்டியிருந்த மணிமேகலை, சில மாதங்களிலேயே சென்னையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கினார். இதுபோக அவரிடம் இரண்டு சொகுசு கார்கள், ஒரு பைக் இருக்கிறது.இந்நிலையில், சென்னையிலேயே மேலும் ஒரு புதிய அப்பார்ட்மெண்டை மணிமேகலை வாங்கியிருக்கிறார். அந்த வீட்டிற்கு விரைவிலேயே குடியேறப்போவதாகவும் அவர் அண்மையில் வெளியிட்டுள்ள பதிவில் மணிமேகலை குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவரது வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சியடைந்துள்ள ரசிகர்கள் மணிமேகலைக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News