நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இருந்த விலகிய வைஷ்ணவி என்பவர் சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து வெளியேறி மற்றொரு கட்சியில் இணைந்தார். அதையடுத்து அவர், விஜய்யின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தார்.

இதையடுத்து சீரியல் நடிகையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சபானா, விஜய்க்கு ஆதரவாக வைஷ்ணவியை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
அவர் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛சினிமா மட்டுமின்றி பொதுச் சேவை மூலமாக கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்பட்டு வரக்கூடியவர்தான் விஜய். நீங்கள் சொல்லும் விஷயங்களை அவர் ஏற்க வேண்டும் என்று எதுவுமில்லை. அவர் குறித்து பேசும் வார்த்தைகளை பார்த்து பேசுங்கள் அவரை பற்றி பேசுவதற்கு முன்பு நீங்கள் உங்களது அறிவை பயன்படுத்துங்கள்’ என்று விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.