காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி, 2023ஆம் ஆண்டு சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, சங்கீதா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார். ஆனால், திடீரென அவர் சீரியலில் இருந்து விலகினார். இதையடுத்து, அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாக, அதனை அவர் சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தினார்.


தற்போது, சங்கீதா கர்ப்பக்கால ஃபோட்டோ ஷூட் நடத்தி, அதற்கான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
மேலும், “என்னுடைய வயிற்றில் குழந்தை வளர்வதை உணர்வது எனக்கு ஆச்சரியமும் அதிசயமும் அளிக்கிறது,” என்று ஒரு பதிவில் தெரிவித்துள்ளார். அத்துடன், இன்னொரு புகைப்படத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான உடைகளை வைத்திருக்கும் காட்சி காணப்படுகிறது.