துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அடுத்ததாக ஆர்.டி.எக்ஸ் பட இயக்குநர் நகாஷ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் தயாரிப்பில் புதிய மலையாள படம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளார். மேலும், கதாநாயகியாக பிரியங்கா மோகனும் இணைந்துள்ளார்.
இது தவிர, துல்கர் சல்மான் மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் முன்னர் ஒரு விளம்பர படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.