தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ராப் பாடகராகக் கருதப்படும் பால் டப்பா தற்போது நடிகராகும் முயற்சியில் களமிறங்கியுள்ளார். இவர் ஒரு இண்டிபெண்டண்ட் (சுயாதீன) ராப் பாடகர். அவரது பாடல்கள் புதுமையான இசையும், தனிச்சிறப்பு வாய்ந்த வரிகளும் கொண்டதாக இருப்பதால் ஜென் Z தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

2022ஆம் ஆண்டில் இவர் பாடிய “3ஷா” மற்றும் “ஐ” போன்ற சுயாதீன பாடல்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. சமீபத்தில் வெளிவந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் ஒரு பாடலில் ரேப் பகுதிக்கு பால் டப்பா குரல் கொடுத்துள்ளார். இவர் பாடிய 170 CM, SAB, Binge and Cringe, OCB மற்றும் ‘காத்து மேல’ ஆகிய பாடல்கள் இணையத்தில் பெரும் வைரலானவை.
தற்போது, பால் டப்பா நடிகராக அறிமுகமாகும் திரைப்படத்தை இயக்குகிறார் விஜய் மில்டன். அவர் கடைசியாக விஜய் ஆண்டனி நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். புதிய இப்படத்தில் தெலுங்கு நடிகர் ராஜ் தருண் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்துள்ளார். இப்படத்தின் மீதான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.