தனது மகளின் நினைவு நாளான நேற்று பாடகி சித்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘என்னால் உன்னை தொட முடியாது. உன் பேச்சைக் கேட்க முடியாது, பார்க்க முடியாது. ஆனால் நீ எப்போதுமே என் இதயத்தில் இருப்பதால் உன்னை என்னால் உணர முடிகிறது என் அன்பே. மீண்டும் நாம் ஒரு நாள் சந்திப்போம். உன்னை இழந்த வலியை அளவிட முடியாது. வானத்தில் பிரகாசிக்கும் மிகப்பெரிய நட்சத்திரம் நீ. படைப்பாளர்களின் உலகில் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என நம்புகிறேன்,’ என்று உருக்கமாக பதிவிட்டுருக்கிறார் பாடகி கே.எஸ்.சித்ரா.
