Touring Talkies
100% Cinema

Monday, October 13, 2025

Touring Talkies

சிவப்பு நிற புடவையில் சிம்ரன் வெளியிட்ட வீடியோ… லைக்குகளை அள்ளி வீசும் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர் சிம்ரன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் சிம்ரன், 90களிலும் 2000களின் தொடக்கத்திலும் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்தார். 2003ஆம் ஆண்டு தீபக் பாகாவை திருமணம் செய்த சிம்ரனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ச்சியாக பல படங்களில் தனது இயல்பான மற்றும் யதார்த்தமான நடிப்பினால் சிம்ரன் சினிமா உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகிறார். தமிழ் சினிமா இன்று கொண்டாடும் முன்னணி நடிகைகளில் ஒருவரான சிம்ரன், தற்போது முதன்முறையாக தயாரிப்பாளராக களம் இறங்க உள்ளார்.

இந்த நிலையிலே சிவப்பு நிற சேலை அணிந்து நடந்து வரும் தனது வீடியோவை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

Read more

Local News