தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சிம்பு, தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள “தக் லைப்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகிறது.
இதன் தொடர்ச்சியாக, ‘பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் உருவாகும் ‘எஸ்டிஆர் 49’ எனும் புதிய படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார். ‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற கயாடு லோஹர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சந்தானம் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதில் சிம்பு ஒரு கல்லூரி மாணவனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘டான் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிம்பு , கயாடு லோஹர், சந்தானம், விடிவி கணேஷ், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விரைவில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.