Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

கட்டம் கட்டி கலக்கப்போகும் சிம்பு… வெளியான சிம்புவின் அடுத்தப்பட அப்டேட் போஸ்டர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‛தக் லைப்’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதைத் தவிர, கமல் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ஒரு வரலாற்று படத்தில் நடிக்க சிம்பு கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக தயார் நிலையில் இருந்தார். எனினும், படத்தின் பட்ஜெட் சிக்கலின் காரணமாக அந்த படம் தாமதம் அடைந்துள்ளது. இதனால், சிம்பு மற்ற படங்களில் நடிக்கத் தயார் ஆகி வருகிறார். இதற்கிடையே, ‛ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் புகழ்பெற்ற அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் முன்னதாகவே வெளியாகியிருந்தது. தற்போது, அந்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளதாக சிம்பு எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். “கட்டம் கட்டி கலக்குறோம்… வின்டேஜ் எஸ்டிஆர் மூட்” எனக் குறிப்பிடும் விதத்தில் தனது பாதி முகம் மட்டும் தெரியும் போன்று, கை விரலில் கட்டம் கட்டியுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக, எக்ஸ் தளத்தில் சிம்பு, “‛Dum + Manmadhan + Vallavan + Vtv in Gen Z mode = NAMBA NEXT!!!” எனவும், “டேய் 2கே கிட்ஸ், 90ஸ் மூடில் நாளைக்கு சார்ப்பா மாலை 6.06 மணிக்கு வரேன்” எனவும் குறிப்பிட்டிருந்தார். அஸ்வத் மாரிமுத்து தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து ‛டிராகன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

- Advertisement -

Read more

Local News