சிலம்பரசன், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படமான ‘அரசன்’லில் நடித்து வருகிறார். இந்த படம் வடசென்னையில் நிகழும் கேங்ஸ்டர் கதையாக உருவாகிறது. சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சிம்பு இரு தோற்றங்களில் அதாவது இளமை மற்றும் முதுமை தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

புரோமோ வீடியோ இன்று (16ஆம் தேதி) மாலை 06.02 மணிக்கு தியேட்டர்களிலும், நாளை (17ஆம் தேதி) காலை 10.06 மணிக்கு யூடியூப்பிலும் வெளியாகவுள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் ‘அரசன்’ படத்தின் புரோமோ திரையிடப்பட்டது. ரசிகர்களை ப்ரோமோ வீடியோ மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது.
இந்த ப்ரோமோ குறித்து ஆவலுடன் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.அரசன் ப்ரோமோ நாளை காலை 10.07 மணிக்கு யூடியூப்பில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.