சண்முகம் முத்துசாமியின் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘டீசல்’. இதில் கருணாஸ், சாய் குமார், அனன்யா, வினய் ராய், தங்கதுரை, ரமேஷ் திலக், தீனா, விவேக் பிரசன்னா ஆகிய பலரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். தெர்ட் ஐ புரொடக்சன்ஸ் மற்றும் எஸ்.பி. புரொடக்சன்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இது ஹரிஷ் கல்யாணின் திரை பயணத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள படமாகும். இதற்கு முன்பு வெளியான ‘பீர் சாங்’ என்ற பாடல் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் சார்ட்ஸ் மூலம் வைரலானது.

தற்போது, ‘டீசல்’ படத்திலிருந்து இரண்டாவது பாடலான ‘தில்லுபாரு ஆஜா’வை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் பிப்ரவரி 18ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.