திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்தில் உள்ள திருமுல்லைவாசல் என்ற ஊரில் அமைந்த மாசிலாமணீசுவரர் கோவிலில் நடிகர் சிம்பு சமீபத்தில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது ஒரு புகழ்பெற்ற சிவன் கோவிலாகும்.
இந்த கோவிலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வழக்கமாக சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் சிம்புவும் இந்த கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவலாக வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிம்பு, தற்போது ‘தக் லைப்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, இன்னும் பெயரிடப்படாத மூன்று புதிய படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.