‘3 BHK’ – குடும்பத்திற்கே மையமாக உருவாகியுள்ள மற்றொரு படம். ‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே பாணியில் உருவாகும் இப்படம், நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை மையமாகக் கொண்டுள்ளது. இன்று ‘3 BHK’ எனும் சொல் அதிகமாக பயன்படுத்தப்படும் முக்கியமான வார்த்தையாக மாறியுள்ளது.
இது சித்தார்த்தின் 40வது திரைப்படம். அவருடன் சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீதா ரகுநாத், சைத்ரா ஆசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் மேற்கொண்டுள்ளனர்.
இசையை அமீர் ராம்நாத் அமைக்க, ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘குருதி ஆட்டம்’ ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்குனராக பணியாற்றியுள்ளார். ‘மாவீரன்’ படத்தை தயாரித்த ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.இப்படத்தின் அறிமுக டீசர் வெளியானதுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது!