நடிகை ஸ்ரேயா சரண் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘சிவாஜி’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘கந்தசாமி’, ‘குட்டி’ உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். பின்னர் பிரபல தொழிலதிபருடன் திருமணம் செய்துகொண்டார். 2017ஆம் ஆண்டு சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படத்திற்குப் பிறகு அவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
தற்போது, சூர்யா நடிக்கும் ‘சூர்யா 44’ படத்தில் சுமார் 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஸ்ரேயா சிறப்பு பாடலுக்காக நடனமாடியுள்ளார். இதுவரை இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வராத நிலையில், தற்போது இதை ஸ்ரேயா சரண் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேட்டியிலில் அவர், சூர்யாவின் படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளேன். மிகச் சிறப்பாக வந்துள்ளது. சீக்கிரமே இது வெளியாகும்” என்று கூறினார். இந்த பாடல் கோவாவில் படமாக்கப்பட்டதாகவும், ‘சூர்யா 44’ அடுத்த ஆண்டு வெளியாக உள்ளதாகவும், சூர்யாவுடன் முதல்முறையாக ஸ்ரேயா நடித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.