Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

முடக்கப்பட்ட ஸ்ரேயா கோஷலின் சமூக வலைதள பக்கம்… ரசிகர்களுக்கு வைத்து மிகப்பெரிய வேண்டுகோள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியாவின் முன்னணி திரைப்படப் பாடகி ஸ்ரேயா கோஷல். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனியாக இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் பிசியாக செயல்பட்டு வருகிறார். அவரது எக்ஸ் (X) தளத்தில் 69 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இந்த சூழ்நிலையில், அவரது எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் அதில் புகுந்து முடக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், “எனது எக்ஸ் கணக்கு கடந்த 13ம் தேதி முதல் முடக்கப்பட்டுள்ளது. இதைச் சரிசெய்ய எக்ஸ் குழுவினரை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆனால், தானியங்கி முறையில் வரும் பதில்களைத் தவிர எந்த உதவியும் கிடைக்கவில்லை. எனது கணக்கை நீக்கவும் முடியவில்லை, அதில் நுழையவும் முடியவில்லை.

எனவே, தயவுசெய்து எனது எக்ஸ் பக்கத்தில் இருந்து வரும் எந்த லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம். எந்த செய்தியையும் நம்ப வேண்டாம். அனைத்தும் போலியானவை மற்றும் மோசடி செய்திகளாக இருக்கும். எனது கணக்கு மீட்கப்பட்ட பிறகு அதற்கான தகவலை வழங்குகிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News