Touring Talkies
100% Cinema

Thursday, September 4, 2025

Touring Talkies

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள மிஸ்ட்ரி த்ரில்லர் வெப் சீரிஸான ‘தி கேம் : யூ நெவர் ப்ளே அலோன்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஸ்ட்ரீமிங் தளமான Netflix, தனது 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ் வெப் தொடரை அறிவித்துள்ளது. ‛The Game: You Never Play Alone’ எனப்படும் இந்த மிஸ்ட்ரி-த்ரில்லர் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.

இந்த தொடரை ராஜேஷ் எம். செல்வா இயக்கியுள்ளார்; கதை, திரைக்கதை, வசனங்களை தீப்தி கோவிந்தராஜன் எழுதியுள்ளார். Applause Entertainment – Netflix India இணைந்து இதனை தயாரித்துள்ளது. ஷ்ரத்தா ஸ்ரீநாதுடன் சாந்தோஷ் பிரதாப், சந்தினி, சயமா ஹரிணி, பாலா ஹசன், சுபாஷ் செல்வம், விவியா சாந்த், தீராஜ், ஹேமா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வெப்தொடரின் கதைக்களம் குறித்து தயாரிப்பாளர்கள் கூறுகையில், நாம் வாழும் டிஜிட்டல் உலகின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் கதை இது. ஒரு பெண் கேம் டெவலப்பர் தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மர்மமான டிஜிட்டல் தாக்குதலை கண்டறியும் முயற்சிதான் தொடரின் மையக்கரு என தெரிவித்துள்ளனர். இந்த தொடர் அக்டோபர் 2, 2025 அன்று Netflix-ல் வெளியாகிறது.

- Advertisement -

Read more

Local News