Touring Talkies
100% Cinema

Tuesday, June 10, 2025

Touring Talkies

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘லாயர்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் ஆண்டனி திரைத் துறையில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். பின்னர் நடிப்பிலும் ஆர்வம் கொண்டு சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். தற்போது முழுநேர நடிகராக பணிாற்றி வருகிறார். தற்போது அவர் கைவசத்தில் ‘ககன மார்கன், வள்ளி மயில், அக்னி சிறகுகள், சக்தி திருமகன்’ ஆகிய படங்கள் உள்ளன.

இதையடுத்து, தனது 26-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘லாயர்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘ஜென்டில்வுமன்’ படத்தின் இயக்குநர் ஜோஷுவா சேதுராமன் இயக்குகிறார். விஜய் ஆண்டனியே இப்படத்தைத் தானே தயாரிக்கிறார்.

இந்திய திரைப்பட நடிகை ரவீனா டாண்டன், இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில், ‘லாயர்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று தொடங்கியுள்ளன. படத்தின் முதல் காட்சியை படம் எடுக்கும் குழு வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News