தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் “ஆக்ஷன் கிங்” அர்ஜுன் இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். சமீப காலமாக வில்லன் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். ஜாலியான என்டர்டெயின்மென்ட் வகையில் உருவாகும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தை இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனரான சுபாஷ் இயக்குகிறார். இதில் அர்ஜுனுக்கு ஜோடியாக விருமாண்டி புகழ் அபிராமி நடிக்கிறார்.
மேலும் இவர்களின் மகளாக ஸ்டார் திரைப்படத்தில் பிரபலமான பிரீத்தி முகுந்தன் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் விவேக் பிரசன்னா, ஜான் கொக்கென், அர்ஜுன் சிதம்பரம், பவன், திலீபன், வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.இப்படத்திற்கான இசையை கே.ஜி.எப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பசூர் இசையமைக்கிறார்.