Touring Talkies
100% Cinema

Tuesday, June 3, 2025

Touring Talkies

என் வாழ்வில் முன்னேற காரணம் இவர்தான்… பூவே உனக்காக பட நடிகை OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடிப்பில் வெளிவந்த பூவே உனக்காக திரைப்படத்தில் அஞ்சு அரவிந்தும், சங்கீதாவும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இதில், அஞ்சு அரவிந்த் ரசிகர்களிடம் அதிக கவனத்தை பெற்றிருந்தார். அதன் பிறகு, சில ஆண்டுகளுக்கு தமிழ் மற்றும் மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்நிலையில், அண்மையில் ஒரு பேட்டியில் அஞ்சு அரவிந்த், கடந்த ஐந்து வருடங்களாக சஞ்சய் அம்பலபரம்பத் என்பவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப் வாழ்வில் இருப்பதாகத் கூறியுள்ளார். அவரை அறிமுகப்படுத்தும் போது, “இவர் எனக்கு புதியவரல்ல. நான் 8 வயதாக இருக்கும்போது பள்ளியில் நடனப்போட்டியில் பங்கேற்கச் சென்றபோது என் திறமையைப் பார்த்து இவருக்கு என் மீது அன்பு ஏற்பட்டது. அதன்பின் நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கை பாதைகளில் தனியாக பிரிந்தோம். இன்று மீண்டும் இணைந்துள்ளோம் என்றால், அதற்குக் காரணம் நேரமே என்று அஞ்சு அரவிந்த் தெரிவித்துள்ளார்.

இப்போது பெங்களூரில் அகாடமி ஆப் டான்ஸ் என்ற பெயரில் நடனப்பள்ளி நடத்தி வருகிறார் அஞ்சு அரவிந்த். இந்த நிலையை அடைய காரணமானவர் சஞ்சய் அம்பலபரம்பத் என்பதையும் அவர் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News