உலகின் பணக்கார நடிகர் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் புதிய சாதனை படைத்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.12,490 கோடி (1.4 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆக உயர்ந்துள்ளது. இதனால் பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் (1.3 பில்லியன் டாலர்), ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (1.2 பில்லியன் டாலர்) ஆகியோரை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

திரையுலகில் 33 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான், 2002 ஆம் ஆண்டு தொடங்கிய ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் சென்னை எக்ஸ்பிரஸ், ரயீஸ், பதான் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார்.
மேலும், ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளர் அவர். இந்த அணி ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களும் லீக் வருமானங்களும் மூலம் பெரும் லாபம் ஈட்டுகிறது. மும்பை, அலிபாக் போன்ற நகரங்களிலும், பிரிட்டன், துபை, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் அவர் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார். அதோடு, சொகுசு வாகனங்கள் மற்றும் லைஃப்ஸ்டைல் பிராண்டுகளிலும் அவரது முதலீடுகள் அதிகம். இவ்வனைத்தும் அவரது சொத்து மதிப்பை உயர்த்தியுள்ளது. இந்தப் பட்டியலில் ஜுஹி சாவ்லா (ரூ.7,790 கோடி) மற்றும் ஹிருத்திக் ரோஷன் (ரூ.2,160 கோடி) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.