Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

ஜிம்மில் தீவிர வொர்க் அவுட்… திடீரென ஏற்பட்ட விபரீதம்… ராகுல் ப்ரீத் சிங்-க்கு ஏற்பட்ட காயத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட படங்களில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் 2009 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த “கில்லி” படத்தின் மூலம் திரையுலகிற்குள் வந்தார். அதன் பிறகு, தமிழில் “யுவன்” படத்தில் நடித்தார். தொடர்ந்து “தடையற தாக்க”, “புத்தகம்”, “என்னமோ ஏதோ” போன்ற படங்களில் நடித்தார்.

பின்னர் 2017 ஆம் ஆண்டில் மகேஷ் பாபுவுடன் ஜோடியாக “ஸ்பைடர்” படத்தில் ஹீரோயினாக நடித்தார், அப்படத்தில் அவர் செய்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து, “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில் குழந்தை போன்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தொடர்ந்து தமிழில் சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். தமிழில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் அவ்வப்போது தோன்றி வந்த ரகுல் ப்ரீத் சிங், தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பகானை திருமணம் செய்து கொண்டார்.

எப்போதும் உடலை டயட், வொர்க் அவுட் மூலம் பிட்டாக வைத்திருக்கும் ரகுல், சமீபத்தில் ஜிம்மில் 80 கிலோ எடையை எத்தகைய பாதுகாப்பு பாண்டேஜ் அல்லது செப்டி பெல்டு இல்லாமல் தூக்க முயன்று முதுகில் பஞ்சரை ஏற்படுத்தி இப்போது ஓய்வில் இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் முட்டாள்தனமான தவறு செய்துவிட்டேன். உடற்பயிற்சியில் என்னை மேலும் முன்னேற்றம் செய்ய நினைத்த முயற்சி இப்போது எனக்கு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டது,” என்று பதிவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News