‘ராட்சசன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் ‘ஆர்யன்’. இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி, செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.பிரவின் கே இயக்கியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 31ம் தேதி தமிழ் மட்டுமின்றி மற்ற தென்னிந்திய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.

சமீபத்திய பேட்டியில் விஷ்ணு விஷால் கூறுகையில், மலையாள சினிமாவின் ‘ஆர்டிஎக்ஸ்’ மற்றும் ‘ஆவேசம்’ படங்கள் தன்னை கவர்ந்தன என்றும், இயக்குனர் பசில் ஜோசப் இயக்கும் படங்கள் எப்போதும் தன்னை வியக்க வைக்கின்றன என்றும் தெரிவித்தார்.
மேலும், ‘ஆர்யன்’ படத்தில் மம்முட்டி நடித்த ‘கண்ணூர் ஸ்குவாட்’ படத்தின் சில காட்சிகள்தனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தன என்றும் கூறியுள்ளார். 2023ல் மம்முட்டி நடிப்பில், ரோபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் வெளியான‘கண்ணூர் ஸ்குவாட்’ திரைப்படம் ஒரு போலீஸ் குழு பல மாநிலங்களில் குற்றவாளியைத் தேடும் த்ரில்லர் கதையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

