தமிழ் திரைப்பட உலகில் “ஜோக்கர்” மற்றும் “கூக்கு” ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் ராஜூ முருகன். அவர் கடைசியாக இயக்கிய “ஜிப்ஸி” மற்றும் “ஜப்பான்” ஆகிய படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தன. இதற்குப் பின்னர் நடிகர் சசிகுமாரை வைத்து ஒரு புதிய படத்தை எந்தவித அறிவிப்பும் இல்லாமல் கடந்த சில மாதங்களாக இயக்கி வந்தார்.
அந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முழுமையாக முடிந்துவிட்டது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனமே தயாரிக்கின்றது. மேலும், இப்படம் ஒரு உணர்வுபூர்வமான கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.