Touring Talkies
100% Cinema

Tuesday, June 3, 2025

Touring Talkies

சசிகுமார் நடித்துள்ள FREEDOM படத்தின் டீஸர் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ‘கழுகு’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவாவின் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் இணைந்து நடித்துள்ள படம் ‘பிரீடம் ஆகஸ்ட் – 14’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். இப்படத்தை பாண்டியன் பரசுராமன் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு பாடல்களை சிநேகனும், மோகன் ராஜாவும் எழுதியுள்ளனர். தமிழ் மொழியுடன் சேர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியிடப்பட உள்ளது.

விஜய கணபதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜிப்ரான் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் கதைக்களம் தவறு செய்யாத நிலையில் இலங்கை அகதிகளாக சிறையில் சிக்கிய இருவரும், அங்கிருந்து தப்பித்து செல்லும் பயணத்தை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

‘பிரீடம்’ திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. சசிகுமார் நடித்துள்ள ‘பிரீடம்’ திரைப்படம் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், ‘பிரீடம்’ படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. 

- Advertisement -

Read more

Local News