பெல்லங்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்த ஹாரர்–த்ரில்லர் கிஷ்கிந்தாபுரி கடந்த 12ஆம் தேதி வெளியானது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலிலும் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது.
கவுஷிக் பேகல்பட்டி இயக்கிய இப்படத்தில் சாண்டி மாஸ்டர், தனிக்கெல்லா பாரணி, ஸ்ரீகாந்த் அய்யங்கார், ஹைப்பர் ஆதி, மக்ரந்த் தேஷ்பாண்டே, சுதர்ஷன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், கிஷ்கிந்தாபுரி படத்தில் நடித்துள்ள சாண்டி மாஸ்டரின் கதாபாத்திர தோற்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் வில்லன் லுக்கில் மிரட்டலாக தோன்றுகிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய லோகா படத்திலும் சாண்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.