தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன் , சமர் போன்ற படங்களை இயக்கியவராகிய திரு, தமிழில் கடைசியாக ‘சந்திர மௌலி’ என்ற படத்தை இயக்கினார். அந்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதன் பிறகு திருவின் அடுத்த திரைப்படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்நிலையில், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி, திரு சத்தமின்றி ஒரு புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார்.

காதல் மற்றும் காமெடி கலந்த ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெய், சாந்தனு, வானி போஜன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததுடன், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.