‘குஷி’ படத்துக்குப் பிறகு வெப்சீரிஸில் நடித்து சமந்தா, தெலுங்கில் ‘சுபம்’ என்ற ஒரு படத்தை தயாரித்திருந்தார். அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதையடுத்து ‘பங்காரம்’ என்ற திரைப்படத்தை தயாரித்து, அதில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

தனது வெளிநாட்டு பயணங்களில் எடுக்கும் புகைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வரும் சமந்தா, இப்போது அபுதாபியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கி இருக்கும்போது எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
அதில், ரிசார்ட்டில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் கிளாமர் உடையில் எடுத்த புகைப்படம் பல லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.