தமிழ், தெலுங்கு திரையுலகைத் தாண்டி, தற்போது ஹிந்தி வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் சமந்தா. இந்த கட்டத்தில், ஒரு பிரபல மேகஸின் அட்டைப்படத்திற்காக, மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000154897-562x1024.jpg)
கருப்பு நிற உடையில், தனது முடி ஸ்டைலை ஆண்களைப் போல் மாற்றியுள்ள அவர், ஹாலிவுட் நடிகைகளை நினைவுபடுத்தும் விதத்தில் தோற்றமளிக்கிறார். இந்த கெட்டப்பில், அவரின் முழு தோற்றமே மாறுபட்டதாய் காணப்படுகிறது. மேலும், அவர் இந்த போட்டோஷூட்டை, ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியல்களில் நடிக்க வேண்டிய அவரது எதிர்கால திட்டத்திற்கான முயற்சியாக நடத்தியிருக்கிறார் என கூறப்படுகிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000154898-475x1024.jpg)
ஏற்கனவே, பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து, சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளனர். தற்போது, அந்த பட்டியலில் விரைவில் சமந்தாவும் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.