பிரபல ஆங்கில எழுத்தாளரும் நாவலாசிரியருமான ருத்யார்டு கிப்ளிங் என்பவர் எழுதிய ஒரு செயுளை மேற்கோள் காட்டி சோர்ந்து போகும் நேரத்தில் எல்லாம் தன்னம்பிக்கை பெறுவதற்காக இதை தான் நான் மனதில் ஏற்றிக் கொள்கிறேன் என்று கூறி சோசியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.இதைப்பார்த்த பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், சமந்தா சொல்வது உண்மைதான். இவர் கூறியுள்ள இந்த செயுளை நான் அப்படியே என் வீட்டில் போட்டோ பிரேம் ஆக மாட்டி வைத்து உள்ளேன். எப்போதெல்லாம் எனக்கு உற்சாகம் இழப்பதாக தோன்றுகிறதோ அப்போது இதை பார்த்து தன்னம்பிக்கை ஏற்றிக் கொள்வேன்” என்று கூறியுள்ளார். அர்ஜுன் கபூரின் இந்த பதிலுக்கு சமந்தா வெள்ளை இதயம் கொண்ட எமோஜியை பதிலாக அளித்துள்ளார்.
