தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ், பாலிவுட்டில் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார்.இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இப்படம் மார்ச் 30-ம் தேதி உலகமுழுவதும் வெளியானது.

ஆனால், சிக்கந்தர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே, முழு படமும் HD தரத்தில் இணையத்தில் கசியியுள்ளது. இதற்காக, சினிமா வட்டாரங்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன.இந்நிலையில், சிக்கந்தர் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அதன் வசூல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரைப்படம் வெளியான 4 நாட்களில், உலகளவில் ரூ.160 கோடி இந்தியாவில் மட்டும் ரூ.84.25 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும், இது எதிர்பார்த்த அளவிலான வசூல் அல்ல என்று கூறப்படுகிறது. சிக்கந்தர் திரைப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாகும்.முதல் நாளில் இப்படம் ரூ.15 கோடி மட்டுமே வசூலித்தது, ஆனால் இதே சல்மான் கான் நடித்த டைகர் ஜிந்தா ஹை திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.33 கோடி வசூலித்தது. அதனால், சிக்கந்தர் திரைப்படம் அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.