Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சாய் பல்லவியை தொடர்ந்து ராமாயணா படத்தில் இணைந்த மற்றொரு பிரபல தென்னிந்திய நடிகை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணக் கதையை மையமாக வைத்து தயாராகும் ‘ராமாயணம்’ படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றுகிறார்.

இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபி தியோல் ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கிடையே, இப்படத்தில் இன்னொரு தென்னிந்திய நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஷோபனா இதில் சாய் பல்லவியுடன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் இரண்டு பாகங்களின் வெளியீட்டு தேதிகளை படக்குழு அறிவித்தது. அதன்படி, முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News