Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பென்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் சாய் அபியங்கர்… எல்.சி.யூ-ல் புது வரவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல பாடகர் திப்புவின் மகன் சாய் அபியன்கர். சமீபகாலமாக இளைஞர்களின் மனதை கவர்ந்த பாடகராக மாறி வருகிறார். ‛‛கட்சி சேர, ஆசை கூட…” போன்ற ஆல்பம் பாடல்களை இவர் உருவாக்கி, பாடி அதில் நடனம் ஆடியுள்ளார். இவரின் ஆல்பம் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இவர் முதல் முறையாக ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, லோகேஷ் கனகராஜின் கதை மற்றும் தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்திற்கு சாய் அபியன்கர் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ஏழு பாடல்கள் இடம்பெறுகிறது என கூறப்படுகிறது.

இதுகுறித்து சாய் அபியன்கர் ஒரு பேட்டியில் கூறியபோது, “பென்ஸ் திரைப்படம் எல்.சி.யூ-வில் வரும் என்பது தெரியாது. பாக்கியராஜ் கண்ணன் அவர்களை முன்பே அறிந்திருக்கிறேன். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒரு வருடத்திற்கு முன்பு பார்த்தேன். அப்போது இந்த படத்துக்கு யார் இசையமைப்பார்கள் என்று நினைத்தேன். கடைசியில் கடவுளின் அருளால் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது,” எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News