மலையாள திரைப்பட உலகில் ‘ரோமாஞ்சம்’ மற்றும் ‘தளவரா’ போன்ற படங்கள் மூலம் கவனம் பெற்ற நடிகர் அர்ஜூன் அசோகன், ‘ப்ரோ கோட்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார். இதைத் தொடர்ந்து, அவரின் அடுத்த திரைப்படமான ‘சத்தா பச்சா’வும் தமிழில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த படத்தில் ரோஷன் மாத்யூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் விசாக் நாயர் மற்றும் இஷான் ஷவுகத் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஷிஹான் ஷவுகத் மற்றும் ரிதேஷ் எஸ். ராமகிருஷ்ணன் இணைந்து தயாரிக்க, அத்வைத் நாயர் இயக்கியுள்ளார். அனேந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். பாடல்களுக்கு சங்கர்–ஏஹ்சான்–லாய் இசையமைத்துள்ளனர், பின்னணி இசையை முஜீப் மஜீத் அமைத்துள்ளார்.
‘த ரிங் ஆஃப் ரவுடீஸ்’ என்ற டேக்லைனுடன் வெளிவரவுள்ள இந்த படம், வரும் ஆண்டு ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொச்சி துறைமுகத்தில் இயங்கியிருந்த ஒரு பைட் கிளப்பை மையமாகக் கொண்டு காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.

