தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது நடிப்பில் 2000ம் ஆண்டு மே 19ஆம் தேதி வெளியான படம் குஷி. இப்படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தை எஸ்.ஜே. சூர்யா இயக்கினார்.
காதலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக விஜயின் திரைப் பயணத்தில் மிகப் பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது. வெளியான காலகட்டத்தில் இப்படம் உலகளவில் ரூ.22 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
தற்போது இந்தப் படம் தரம் உயர்த்தப்பட்ட 4K டிஜிட்டல் வடிவில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. வரும் 25ஆம் தேதி இப்படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னோட்டமாக, குஷி பட இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா, குஷி படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லரை வெளியிட்டுள்ளார்.