நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய பல மொழிகளில் பிஸியாக தொடர்ந்து நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும், அவர் படங்களில் நடிப்பதை குறைக்காமல் தன் பணி வேகமாக முன்னெடுத்து வருகிறார்.

தற்போது, தெலுங்கில் ரவி கிரண் கோலா இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் ரவுடி ஜனார்த்தன் என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். ஆரம்பத்தில் இந்த படத்தின் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தது.
ஆனால், இப்படத்தில் ஒரு நெருக்கமான காட்சி இருப்பதால், அதில் நடிக்க ருக்மணி வசந்த் மறுத்துவிட்டாராம். அதன் பின்னர், படக்குழு கீர்த்தி சுரேஷை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

