Touring Talkies
100% Cinema

Friday, May 30, 2025

Touring Talkies

ராக் ஸ்டார் அனிருத் தான் இதில் நம்பர் ஒன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை தற்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் அனிருத் நம்பர் 1 இடத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவருடைய சம்பளம் 15 கோடி என்கிறார்கள். அவர் இசையமைக்கும் படங்களின் உரிமையும் அந்த விலையை விடவும் அதிகம் போவதால் அந்த சம்பளத்தைக் கொடுக்கத் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களாம். அவருக்குப் பிறகு தேவி ஸ்ரீ பிரசாத், தமன் உள்ளிட்டவர்கள் 10 கோடிக்கும் அதிகமாக வாங்குகிறார்களாம்.அனிருத் இந்திய அளவில் பிரபலமாக உள்ளதால் அவருக்கு தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. ரஜினிகாந்த், ஷாரூக்கான் படங்களுக்கு இசையமைத்தும் அவருடைய ஸ்டார் அந்தஸ்திற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News