ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்கும் ‘காந்தாரா 2’ படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.காந்தாரா மற்றும் கேஜிஎப் 2, சலார் ஆகிய படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனமே ‘காந்தாரா 2’யும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
