ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஹிந்தி மொழியில் மட்டும் இப்படம் 100 கோடியைத் தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022ல் வெளிவந்த ‘காந்தாரா’ படம் 80 கோடிக்கும் சற்றே அதிகமான வசூலைப் பெற்றிருந்தது. அதை தற்போது ‘காந்தாரா 1’ படம் முறியடித்துள்ளது. மேலும், அடுத்த சில நாட்களில் இப்படம் 500 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னிந்திய மொழிகளில் தயாராகும் சில திரைப்படங்கள் ஹிந்தியில் 100 கோடி ரூபாய் வசூலைப் பெறுவது அரிதானது. ஹிந்தியில் அதிக வசூலைப் பெற்ற தென்னிந்திய படங்களில் ‘புஷ்பா 2’ 800 கோடி வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து ‘பாகுபலி 2’ 500 கோடியும், ‘கேஜிஎப் 2’ 400 கோடியும் வசூலித்துள்ளன. 200 கோடியைத் தாண்டிய படங்களாக ‘கல்கி 2898 ஏடி’ மற்றும் ‘ஆர்ஆர்ஆர்’ படங்கள் இருக்கின்றன. அதேபோல் ‘2.0’, ‘சலார்’, ‘சாஹோ’, ‘பாகுபலி 1’, ‘புஷ்பா 1’ ஆகியவை 100 கோடியைத் தாண்டிய திரைப்படங்களாகும்.