மலையாள திரைப்பட உலகில் முன்னணி நடிகை ரிமா கல்லிங்கல். அவரின் நடிப்பில் உருவாகியுள்ள தி மித் ஆஃப் ரியாலிட்டி திரைப்படம் வரும் 16 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இப்படத்தின் போஸ்டரில் ரிமா தென்னை மரத்தில் ஏறும் காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த போஸ்டர் வெளியாகியவுடன், சமூக வலைதளங்களில் சிலர் அவரை குறிவைத்து ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

இதுகுறித்து ரிமா கல்லிங்கல் அளித்த பேட்டியில் கூறியதாவது: “இந்த படத்தில் நான் ஒரு தீவில் தனியாக வசிக்கும் பெண்ணாக நடிக்கிறேன்; அந்தக் கதாபாத்திரம் தனது வாழ்வின் அனைத்து வேலைகளையும் தானே செய்து கொள்கிறாள். இப்படத்துக்காக தென்னை மரம் ஏறக் கற்றுக் கொண்டேன். அங்கே சிக்ஸ் பேக் உடல் அமைப்பு கொண்ட ஒரு இளைஞர் எனக்கு தென்னை மரம் ஏற கற்றுக் கொடுத்தார். பல நாட்கள் தொடர்ந்து பயிற்சி எடுத்த பிறகு மரம் ஏறுவது எனக்கு எளிதாகி விட்டது. அது எனக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது.
அப்படத்தில் சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன் விமானத்தில் இருந்து குதித்தும், பாம்பை கழுத்தில் போட்டு நடித்தும் உள்ளேன். இப்படிப் பட்ட சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு எனக்கு எப்போதும் மிகுந்த விருப்பம் என ரிமா தெரிவித்துள்ளார்.