Monday, November 18, 2024

விடி12 படத்திற்காக கடுமையான பயிற்சி… ஐஸ் பாத் எடுத்த விஜய் தேவரகொண்டா எதற்கு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விடி12″ படத்துக்காக தீவிர சண்டைக் காட்சிகளில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வருவதால், ஐஸ் பாத் செய்யும் தகவல் ஆங்கில ஊடகத்தில் வெளியாகியுள்ளது. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அவரின் 13வது படத்தின் அறிவிப்பு கடந்த ஜூனில் வெளியானது. 

2019இல் தெலுங்கில் வெளியான “ஜெர்ஸி” படத்தின் இயக்குனர் கௌதம் தின்னானூரியுடன் மீண்டும் இணைந்துள்ளார் விஜய். நானி நடித்த “ஜெர்ஸி” திரைப்படம் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், 13ஆவது படம் என அறிவித்த “பேமிலி ஸ்டார்” திரைப்படம் வெளியானது, ஆனால் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதில் பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடித்தார். இவர் “சப்த சாகரதாச்சே எல்லோ” படத்தின் மூலம் பிரபலமானார்.

தற்போது, விஜய் தேவரகொண்டா “விடி12” படத்துக்காக தீவிரமான சண்டைக் காட்சிகளில் நடித்து வருவதால் தசைகள் சோர்வடையாமல் இருக்கு ஐஸ் பாத் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

- Advertisement -

Read more

Local News