நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படமான ‘ரெட்ரோ’ திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றியுள்ளார்.

பூஜா ஹெக்டே இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவருடன் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை ஒட்டி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தையதாக வெளியான டீசரும், முதல் பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அதன் பின்னர், இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் காமிக்ஸ் வடிவில் வெளியானதும், சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.
இப்படத்தின் முதல் பாடலாக வெளியான “கண்ணாடி பூவே” பாடல் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கி வரும் நிலையில், இதற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 18ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தநிலையில், ‘ரெட்ரோ’ படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகும் என்று இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார். “தி ஒன்” எனும் பெயருடைய இப்பாடல் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கான வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.