ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே. மாணிக்கம் தயாரித்துள்ள திரைப்படம் ‘ரெட் ஃப்ளவர்’. இதில் விக்னேஷ் கதாநாயகனாகவும், மனிஷா ஜஷ்னானி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மனிஷா, மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்குள் வந்தவர். இதற்கு முன்பு ‘இருக்கு ஆனா இல்ல’, ‘வீர சிவாஜி’, ‘போங்கு’ போன்ற சில திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். ‘போங்கு’ திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு 8 வருடங்கள் கழித்து, ‘ரெட் பிளவர்’ திரைப்படம் மூலமாக திரைக்கு திரும்புகிறார்.

இந்த படத்தில் நாசர், ஒய்.ஜி. மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்னம், லீலா சாம்சன், டி.எம். கார்த்திக், கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம் மற்றும் யோக் ஜேபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் ராம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியுள்ளார்.
படம் குறித்து இயக்குநர் கூறுகையில், ‘ரெட் பிளவர்’ திரைப்படம் கி.பி-ல் மூன்றாம் உலகப் போர் நடந்த பிந்தைய காலகட்டத்தை சித்தரிக்கிறது. இதில் தேசபக்தி, இரட்டை சகோதரர்களுக்கு இடையிலான துரோகம், அவர்களின் இறுதி நல்லிணக்கம் ஆகியவை இப்படத்தில் பேசப்படுகின்றன. ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் சக்திவாய்ந்த செய்தியை இந்த படம் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறோம். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.