நடிகை ரெபா மோனிகா ஜான் தமிழில் வெகு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ‘ஜருகண்டி’, ‘பிகில்’, ‘எப்.ஐ.ஆர்’ போன்ற சில திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
தற்போது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரெபா. அதனுடன் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில், தெலுங்கில் கல்யாண் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மேட் ஸ்கொயர்’ எனும் திரைப்படத்தில் ரெபா மோனிகா ஜான் ஒரு சிறப்பு பாடலுக்கு மிகவும் கிளாமராக நடனமாடியுள்ளார். ‘ஸ்வாதி ரெட்டி’ எனும் பெயரில் இந்த பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது.